Home /News /coronavirus-latest-news /

வாங்க ஆள் இல்லாத நிலை: மதுரையில் காய்கறிகளின் விலை கடும் சரிவு..!

வாங்க ஆள் இல்லாத நிலை: மதுரையில் காய்கறிகளின் விலை கடும் சரிவு..!

மதுரையில் காய்கறி விலை கடும் சரிவு

மதுரையில் காய்கறி விலை கடும் சரிவு

காய்கறிகள் விற்பனை ஆகாததால் தினந்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரையில் காய்கறிகள் விலை கடுமையான சரிவை சந்தித்த நிலையில் வாங்க ஆளின்றி அவை வீணாகி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு அமல் படுத்திய பின்பு மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், பல்வேறு பகுதிகளுக்கு பிரிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் 14 இடங்களில் தற்காலிக சந்தை என்கிற பெயரில் அவை செயல்பட்டு வருகின்றன. துவக்கத்தில் காய்கறிகள் விலை உச்சத்தில் இருந்தாலும் அதன் பின்பாக விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்டவை கிலோ 30 ரூபாய்க்கு குறைவாகவே விற்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மதுரையிலிருந்து செல்லக்கூடிய காய்கறி வரத்து கணிசமாக குறைந்ததால் அவை அனைத்தையும் உள்ளூரிலேயே இருக்கக்கூடிய சூழல் உருவானது.

இதனால் கடந்த சில நாட்களாகவே கடும் சரிவில் இருந்த காய்கறிகளை இன்று மேலும் சரிந்து சொற்ப விலைக்கு விற்பனையானது. குறிப்பாக

தக்காளி கிலோ ரூ.10

கத்தரிக்காய் கிலோ ரூ.20

முட்டை கோஸ் கிலோ ரூ‌20

வெண்டைக்காய் கிலோ ரூ.20

கேரட் கிலோ ரூ.25,

சவுசவு கிலோ ரூ.20,

பீன்ஸ் கிலோ ரூ.50

உருளை கிலோ ரூ.35

சி.வெங்காயம் கிலோ 40

பெ.வெங்காயம் கிலோ ரூ.15

என விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. விலை குறைந்திருந்தும் வாங்க ஆளில்லாமல் தற்காலிக காய்கறி சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. காய்கறிகள் விற்பனை ஆகாததால் தினந்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Lockdown, Vegetable price

அடுத்த செய்தி