திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் காய்கறி கடைகள் பழங்கள் விற்பனை சந்தைகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஈசானிய மைதானம், காந்திநகர் தற்காலிக பேருந்து நிலையம், செங்கம் சாலையில் உள்ள சந்தை மேடு உள்ளிட்ட இடங்களில் சில்லரை வியாபாரிகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வளாகத்தில் மொத்த வியாபாரிகளும் வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கம் புதிய பேருந்து நிலையத்திலும், போளூர் பேருந்து நிலையத்திலும், ஆரணியில் கோட்டை மைதானத்திலும், செய்யாறு அனக்காவூர் சாலையிலும், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையிலும், கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலக பிரதான சாலையிலும் காய்கறி பழங்களுக்கான சந்தைகள் இன்று முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் கடை நடத்த வேண்டும் என்றும், வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Also see...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.