ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம் - வாடிகன் அறிவிப்பு

”ஈஸ்டர் பிரார்த்தனை கூட்டம் இணையத்தில் ஒளிபரப்பு என வாடிகன் அறிவித்துள்ளது”

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம் - வாடிகன் அறிவிப்பு
”ஈஸ்டர் பிரார்த்தனை கூட்டம் இணையத்தில் ஒளிபரப்பு என வாடிகன் அறிவித்துள்ளது”
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, இந்த ஆண்டு பக்தர்கள் நேரில் வராமல் ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெறும் என்று வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இத்தாலியின் வெறிச்சோடிய தெருக்களில் நடந்து சென்ற போப், கொரோனா தொற்று முடிவிற்கு வர பிரார்த்தனை மேற்கொண்டார். கொரோனா அச்சம் காரணமாக வாடிகனில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி நடைபெறும் பாரம்பரியமான ஈஸ்டர் வார பிரார்த்தனைகள், பங்கேற்பாளர் யாருமின்றி நடத்தப்படும் என்று வாடிகன் அறிவித்துள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி வரை அனைத்து பிரார்த்தனை கூட்டங்களும் வாடிகனின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரோமில் உள்ள இரண்டு தேவாலயங்களுக்குச் சென்ற போப் அங்குபிரார்த்தனை செய்தார்.

இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2, 572 ஆக அதிகரித்துவிட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...அமெரிக்காவில் இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை! 45 இளைஞர்களுக்கு செலுத்தப்படுகிறது

நைஜீரியாவில் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உயிரிழப்பு

 
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading