வசந்தகுமாருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ்... பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி

வசந்தகுமார் உடல் நாளை காலை 5 மணிக்கு அவரது வீட்டிற்கு கொண்டு சென்று, பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக சத்தியமூர்த்திபவன் வளாகம் முன்வைக்கப்பட உள்ளது.

வசந்தகுமாருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ்... பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி
வசந்த குமார் எம்.பி
  • Share this:
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமாருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி, எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை காலமானார். இவருக்கு வயது 70. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார்.


வயது மூப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சுயநினைவு இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இன்று மேலும் அவரது உடலை மேசமடைந்து கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமாருக்கு தற்போது கொரோனா நெகடிவ் வந்துள்ளது. அவர் secondary infection காரணமாக, மூச்சுவிடுவதில் சிரமபப்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார்.  இதனால் அவருடைய உடலை வீட்டிற்கு கொண்டு செல்லவும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வசந்தகுமார் உடல் நாளை காலை 5 மணிக்கு அவரது வீட்டிற்கு கொண்டு சென்று, பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக சத்தியமூர்த்திபவன் வளாகம் முன்வைக்கப்பட உள்ளது.



பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், வசந்தகுமாரின் சொந்த ஊரான நாங்குநேரியில் உள்ள அகதீஸ்வரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading