• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • RIP Nitish Veera: வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு!

RIP Nitish Veera: வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு!

நடிகர் நிதிஷ் வீரா

நடிகர் நிதிஷ் வீரா

கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Share this:
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார்.

இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, கடந்த ஆண்டு பரவிய முதல் அலையைக் காட்டிலும் படுபாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் நிதிஷ் வீரா, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 17) காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் வல்லரசு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்த நிதிஷ் வீராவை தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் அடையாளப்படுத்தியது. இதன் பின்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நல்ல நடிகர் என பெயரெடுத்தார்.

ரஜினியின் காலா, அசுரன், நேற்று இன்று, ராட்சசி போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார் நடிகர் நிதிஷ் வீரா.

நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிகர் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Read More:   அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்!


நடிகரும், பாடலாசிரியரும், பாடகரும், இயக்குனருமான அருண் ராஜா காமாராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் நடிகர் நிதிஷ் வீராவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா பாதிப்பாலும், மாரடைப்பாலும் திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது ரசிகர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: