ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டி: 8 பேர் கைது..!

மதகுபட்டி காவல்நிலையம்

தலைமைக் காவலர் கனகராஜை மாடு ஒன்று முட்டியதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

  • Share this:
    ஊரடங்கு உத்தரவை மீறி சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மதகுபட்டி அடுத்த கீழக் கோட்டையில் உள்ள கண்மாயில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது, தலைமைக் காவலர் கனகராஜை மாடு ஒன்று முட்டியதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்களை கூட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொய்யாமொழிப்பட்டியை சேர்ந்த ராமன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: