ஹோம் /நியூஸ் /கொரோனா /

Vaccine | தமிழகத்தில் எங்கெல்லாம் தடுப்பூசி இன்று போடப்படாது.. விவரம்

Vaccine | தமிழகத்தில் எங்கெல்லாம் தடுப்பூசி இன்று போடப்படாது.. விவரம்

தடுப்பூசி பற்றாக்குறையால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 473000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் இன்று தடுப்பூசி போடப்பட மாட்டாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி வந்ததும், செலுத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜுலை 05, 2021)

  இதேபோல், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படாது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துறையூர், முசிறி, லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Corona Vaccine