அமெரிக்காவில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி - அதிபர் ஜோ பைடன் இலக்கு

அமெரிக்காவில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி - அதிபர் ஜோ பைடன் இலக்கு

ஜோ பைடன்

ஏப்ரல் 19ம் தேதிக்குள் 90 சதவீத பெரியவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி பெறுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவில் இன்னும் 3 வாரங்களில், 90 சதவீத பெரியவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தகுதியை பெறுவார்கள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தமது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.

  இந்நிலையில், ஏப்ரல் 19ம் தேதிக்குள் 90 சதவீத பெரியவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி பெறுவார்கள் என அவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து, அதிகபட்சம் 5 மைல் தூரத்துக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

  மே மாத இறுதிக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: