• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Vaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

Vaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தடுப்பூசி

தடுப்பூசி

துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வருவதுடன், முன்பதிவும் செய்து வருகின்றனர்.

  • Share this:
    அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் 100 சதவீதம் திறனுடையதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் குடியிருப்பு விசா பெற்று வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், துபாயில் சுகாதார அமைச்சகம் சார்பில் கிராண்ட் ஹயாத் வளாகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பூசி முகாமில் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு செல்கின்றனர்.

    துபாயில் உள்ள இந்திய தனியார் பள்ளி சார்பில் மட்டும் வாரத்திற்கு 2 ஆயிரம் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு தனியார் பள்ளி சார்பில், வரும் வாரத்தில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என கருதப்படும் நிலையில், அமீரகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு முன்னதாக, பள்ளி மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவில், பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை அறிவுறுத்தின.

    எனினும், தற்போதைய நிலையில் இது நடைமுறை சாத்தியம் இல்லை கூறப்படுகின்றது. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தடுப்பூசிகள் இருந்தால் மட்டுமே அதை போட முடியும் என கூறும் நிபுணர்கள், இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2 தடுப்பூசிகளும் அதற்கான பரிசோதனையை இன்னும் முடிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    Must Read : கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களா

     

    பைசர் தடுப்பூசி மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருப்பதாக கூறும் நிபுணர்கள், அந்த தடுப்பூசி இந்தியாவில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: