Vaccine for 18+ : தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை செல்லும் முன்பே வாகனத்தில் ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ஊரடங்குதான் கொரோனாவை தடுக்கும் ஒரே வழியாக உள்ளதாக கூறினார். ஊரடங்கு நீடிக்குமா என போகப் போகத்தான் தெரியும் என்று கூறிய அவர், சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் 4 ஆயிரத்து 300 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் இவற்றை, குறைந்த அளவில் தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

    Must Read : 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - மத்திய அரசு தகவல்

     

    சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாகவும் கூறினார்.
    Published by:Suresh V
    First published: