Home /News /coronavirus-latest-news /

கொரோனா பரவலால் உ.பி.யில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு!

கொரோனா பரவலால் உ.பி.யில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு!

 உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உத்தரபிரதேச அரசு ஒத்திவைத்துள்ளது.

    இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த பணிகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை ஒத்திவைத்தி வைப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Census 2021, CoronaVirus

    அடுத்த செய்தி