Daksha Drone : கொரோனா தடுப்பு பணிக்காக உதவும் தக்ஷா குழு உருவாக்கிய ட்ரோன்
Daksha Drone : கொரோனா தடுப்பு பணிக்காக உதவும் தக்ஷா குழு உருவாக்கிய ட்ரோன்
கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய ட்ரோன்களை பயன்படுத்தி கிருமிநாசினி தெளித்ததன் மூலம் குறிப்பிடத்தகுந்த பலன் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் "தக்ஷா" தொழில்நுட்ப குழுவினர் கொரோனா பேரிடருக்கு உதவும் வகையில் புதிய வகை ட்ரோனை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் நெல்லை மாநகராட்சியில் நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது.
இந்த குழுவினர் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து வேதிப்பொருட்களுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழ வகைகளிலிருந்து பெறப்படும் வேதிக்கலவை, வெஜிடப்பிள் கிளிசரின் ஆயில் எனப்படும் கலவை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் ஒழிப்பு மருந்தை ட்ரோன்கள் உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தெளிக்கும் பணி மேற்கொண்டனர்.
இதன் மூலம் பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய வைரஸ், பாக்டீரியா போன்றவை 70 முதல் 80 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நோய் பரவலை தடுக்க நெல்லையில் ட்ரோன்கள் பயன்படுத்தி மருந்து தெளித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் தக்ஷா குழுவிற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ள தக்ஷா குழுவினர், அரசு அனுமதி கொடுத்தால் தமிழகம் முழுவதும் இந்த பணியை விரிவுபடுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆர்கானிக் கலவைகளை கொண்ட கிருமி நாசினி மனிதர்கள் மீது படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தக்ஷா குழு நிர்வாகி கார்த்திக் நாராயணன் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.