• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பொது இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்கவும்: சுகாதாரத்துறை

பொது இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்கவும்: சுகாதாரத்துறை

கிருமிநாசினி சுரங்கங்கம்

கிருமிநாசினி சுரங்கங்கம்

கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தல்.

  • Share this:
    பொது இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இந்தியாவில் முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஏப்ரல் 1-ம் தேதி திருப்பூரில் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல மாவட்டங்களும் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பை பின்பற்றின.

    இந்நிலையில், கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்திட முடியாது என்றும் அதனால் உடல்நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பை தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

    கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதில் சோப்பு உள்ளிட்டவற்றால் கைகளை கழுவுவதாலும் முக கவசம்போட்டுக் கொள்வதாலும் வைரஸ் பரவலைத் தடுக்க  பயனுள்ளதாக இருக்கும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: