கொரோனா முன்னெச்சரிக்கை: கடைக்குப் போறீங்களா..? இதை பார்த்துவிட்டு செல்லவும்..!

கொரோனா முன்னெச்சரிக்கை: கடைக்குப் போறீங்களா..? இதை பார்த்துவிட்டு செல்லவும்..!
மளிகைக் கடை
  • Share this:
கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதாக மருத்துவர்களும் , அரசும் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும் மக்களின் அத்தியாவசியத் தேவைக்கு மளிகைக் கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மளிகைக் கடைகளில் கூடும் கூட்டம் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மனிதர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் என்று கூறியும் மளிகைக் கடைகளில் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காண முடிகிறது. அதோடு பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதும் ஆபத்து.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும். இதற்கு என்ன செய்வது என்று யோசித்த திருப்பூர் ஆட்சியர் சிறந்த ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த விழிப்புணர்வு வீடியோவில் ‘ மக்கள் மளிகைக் கடை கூட்டத்தைத் தவிர்க்க அருகில் உள்ள மளிகைக் கடைக்காரரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள். அவர் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் எனில் உங்கள் தேவைகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள். அந்த பொருட்களை அவர் எடுத்து வைத்துவிட்டு உங்களைத் தொடர்பு கொண்ட பின் அவற்றை வாங்கி வாருங்கள் என்று அந்த வீடியோவில் இருக்கும் நபர் கூறுகிறார்.ஒருவேலை அவருக்கு வாட்ஸ்அப் இல்லை என்றாலும் அலைபேசியில் அழைத்து தேவையான பொருட்களை சொல்ல அவர் எடுத்து வைத்தவுடன் சென்று வாங்கி வாருங்கள் என்றும் யோசனை அளிக்கிறார்.

மேலும் இந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பி மற்ற மளிகைக்கடை , உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இந்த யோசனையை செய்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் அந்த நபர். இதனால் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும்.
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்