நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறைவான
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர். அவ்வாறு செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா வேரியண்ட்டிடம் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என கணித்துள்ளனர்.
Must Read | கொரோனா பாதித்த ஆஸ்துமா நோயாளிகள் உரிய சிகிச்சை பெற்று வந்தால் தீவிரம் குறையும்- ஆய்வில் தகவல்!
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து வந்த அறிவிப்பின்படி, பலருக்கு டெல்டா வேரியண்ட் எளிதில் தாக்கக்கூடும் என அஞ்சுகின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய் மற்றும் மற்ற இணை-நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம். பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதே போன்ற பரிந்துரைகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா நோய் பரவலுக்கு எதிராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என அமெரிக்க சுகாதார தரப்பு அறிவித்துள்ளது இதுவே முதல்முறை. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள அமெரிக்கர்களை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட வைப்பதே நோக்கம் என்றார்.
மேலும், இந்த முடிவு அதிக ஆபத்துள்ள குழுவிற்கும், சுமார் 3 சதவீத வயது முதிர்ந்த அமெரிக்கர்ககளுக்கு மட்டுமே பொருந்தும் என்றார். இது நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படும் மக்களுக்கு செலுத்தப்படாது எனவும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.