முகப்பு /செய்தி /கொரோனா / நவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா

நவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் அமெரிக்காவின் நடவடிக்கையை பாராட்டியுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் அமெரிக்காவின் நடவடிக்கையை பாராட்டியுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் அமெரிக்காவின் நடவடிக்கையை பாராட்டியுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :

வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு அமெரிக்கா தனது எல்லைகளைத் திறக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்த அமெரிக்க பயணக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மேலும், ஐரோப்பா, இந்தியா, பிரேசில் மற்றும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து நேரடியாக வரும் பெரும்பாலான வெளிநாட்டினரைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இது அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

புதிய முறையின் கீழ், தடுப்பூசி செலுத்திவிட்டு அமெரிக்கா வரும் பயணிகள், தங்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் முடிவு வந்த பின்னர் தொடர்பு தடமறிதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அமெரிக்காவிற்குள் வர முடியும். கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்களுக்கும் கொரோனா சோதனையில் நெகட்டிவ் என சான்றிதழ் இல்லாவிட்டால் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read | மொபைல்… குழந்தைகள்… பெற்றோர்களுக்கு மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை!

இந்த நடவடிக்கை முதலில் செப்டம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உடனடியாக கூறவில்லை. கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான அட்லாண்டிக் விமானங்கள், பிரீமியம் பயணிகளால் நிரப்பப்பட்டவை. உலகளாவிய விமான சந்தையில் மிகவும் இலாபகரமான பகுதியாக இது இருந்தது.

நவம்பர் 8ஆம் தேதி விமான பயண விதிகளின் மாற்றத்திற்கும், இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கனடா மற்றும் மெக்சிகோவுடனான எல்லைகள் திறப்புக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது உலக சுகாதார அமைப்பு அறிவித்த அவசர பயன்பாட்டு பட்டியலில் அத்தடுப்பூசி இடம்பெற்றிருந்தால், அப்பயணிகளையும் அமெரிக்க நாடு அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சாலை வழியாக அமெரிக்கா வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்று அந்த அதிகாரி கூறினார்.

First published:

Tags: America, Covid-19, Covid-19 vaccine