கொரோனா வைரஸை இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்!
பேராசிரியர் மார்க்கஸ் பியூலர் தலைமையிலான குழு செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த இசைக்கோர்வையை உருவாக்கியுள்ளது.

கொரோனாவை இசை வடிவமாக்கிய விஞ்ஞானிகள்.
- News18 Tamil
- Last Updated: April 26, 2020, 8:38 PM IST
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை புரிந்துகொள்ளும் முயற்சியாக கொரோனா வைரஸின் புரதக் கட்டமைப்பை அமெரிக்க விஞ்ஞானிகள் இசையாக மாற்றியுள்ளனர்.
பேராசிரியர் மார்க்கஸ் பியூலர் தலைமையிலான குழு செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த இசைக்கோர்வையை உருவாக்கியுள்ளது. புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களுக்கு குறிப்பிட்ட இசைக்குறிப்பை நிர்ணயித்த விஞ்ஞானிகள் அதன் மூலம் புரதக் கட்டமைப்பிற்கான இசைக்கோர்வையை உருவாக்கியுள்ளனர். இந்த இசைக்குறிப்புகளுக்கான கவுன்டர் பாயிண்ட்களைக் கொண்டு இதற்கு எதிரான இசைக்குறிப்பை உருவாக்கினால் அதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பியூலர்.
Also see: