கொரோனா வைரஸை சீனா உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்காது...! டிரம்ப்

டிரம்பின் இந்தக் கருத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸை சீனா உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்காது...! டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
  • Share this:
கொரோனா வைரஸை சீனா உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்கும் என்று தான் நம்பவில்லையென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறிய நிலையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக மைக் பாம்பியோ கூறி வந்த நிலையில் திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.


இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், சீனா கொரோனா வைரஸை உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்கும் என்று தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also see...
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading