• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 20 மாதங்கள் நீடித்த கொரோனா பயண கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா!

20 மாதங்கள் நீடித்த கொரோனா பயண கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா!

அமெரிக்க அதிபரான ஜோபிடன் அரசு நிர்வாகம் கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பதால் புக்கிங்ஸ் அதிகரித்துள்ளதாக முக்கிய விமான நிறுவனங்களின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உலகநாடுகள் விலக்கி வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள சர்வதேச பயணிகளுக்காக உலக வல்லரசான அமெரிக்கா தனது சர்வதேச எல்லைகளை சமீபத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த கோவிட் பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவால் சுற்றுலாதுறை முக்கியமாக பல மாதங்களாக கோவிட்-19 கட்டுப்பாடுகளால் பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர வழி ஏற்பட்டு உள்ளது

இந்த வார துவக்கத்தில் (நவம்பர் 8) அத்தியாவசியமற்ற பயணத்திற்கான தடையை அமெரிக்கா நீக்கியது. இதனால் 20 மாத பயணக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்திருந்தாலும், COVID-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்காக மட்டுமே அமெரிக்கா தனது தரை மற்றும் வான் எல்லைகளை மீண்டும் திறந்துள்ளது. நெவார்க் லிபர்ட்டி மற்றும் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையங்களில் சர்வதேச விமானங்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

அமெரிக்க அதிபரான ஜோபிடன் அரசு நிர்வாகம் கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பதால் புக்கிங்ஸ் அதிகரித்துள்ளதாக முக்கிய விமான நிறுவனங்களின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் அதிகரித்து காணப்படுகின்றன.

Must Read | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

விலக்கு: 

தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும் அமெரிக்காவிற்கு செல்வதற்கு 3 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கோவிட் டெஸ்ட்டின் நெகட்டிவ் ரிசல்ட்டைகொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தடுப்பூசி குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் சில விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து விமான பயணிகள், நெகட்டிவ் கோவிட்-19 டெஸ்ட் ரிசல்ட்டை கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதற்கான ஆதாரங்களின் டிஜிட்டல் மற்றும் காகித ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தவிர vaccine cards ஆங்கிலத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா வரும் பயணிகள் தங்கள் தடுப்பூசி நிலை (vaccination status) மற்றும் பயணத்திற்கான காரணத்தை தெளிவாக்க தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கோரினால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜான்சன் & ஜான்சன், ஃபைசர்/பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா, கோவிஷீல்ட், சினோபார்ம் மற்றும் சினோவாக் உள்ளிட்ட தடுப்பூசிகள் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் உள்ளன.

ஹவாய், இல்லினாய்ஸ், நியூ மெக்சிகோ, நெவாடா, ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட சில நகரங்களில், உணவகங்கள் உட்பட உட்புற பொது இடங்களுக்கு செல்ல முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: