அதிக கொரோனா பாதிப்புகள்... சீனாவை முந்தி முதலிடத்திற்கு வந்த அமெரிக்கா...!

அதிக கொரோனா பாதிப்புகள்... சீனாவை முந்தி முதலிடத்திற்கு வந்த அமெரிக்கா...!
  • News18
  • Last Updated: March 27, 2020, 7:42 AM IST
  • Share this:
கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் நாடாக சீனா இருந்த நிலையில், அமெரிக்கா தற்போது முதலிடத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது.

சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.


தற்போது வரை உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர். சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை சீனா கிட்டத்தட்ட கட்டுப்படுத்திய நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

முதன் முதலாக பரவிய சீனாவில், இது வரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 8,215 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 82,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 27-ம் தேதி காலை 7 மணி வரை உள்ள நிலவரம்


இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. எனினும், சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. இதுவரை 1,177 பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்