• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அமெரிக்க தேர்தல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த கொரோனா தடுப்பூசி

அமெரிக்க தேர்தல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த கொரோனா தடுப்பூசி

டிரம்ப் | கமலா ஹாரிஸ்

டிரம்ப் | கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி மூலம் வாக்குகளை கவர டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பில் டிரம்பை நம்ப முடியாது என கமலா ஹாரீஸ் விமர்சித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நவம்பர் ஒன்றாம் தேதி கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக அண்மையில் டிரம்ப் தெரிவித்தார்.

    3ஆம் கட்ட பரிசோதனைக்கு முன்பே அவசர கால பயன்பாடு அடிப்படையில் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தடுப்பூசி விவகாரத்தில் நிபுணர்களின் கருத்தை டிரம்ப் அலட்சியம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரீஸ் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கொரோனா தொற்று குறித்த நிபுணர்களின் கருத்தை ஒடுக்குவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாகவும், இதேபோன்ற நடவடிக்கை தடுப்பூசி விவகாரத்தில் நிகழக்கூடும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



    நவம்பர் மாதத்துக்கு முன்பு தடுப்பூசி கிடைத்தால் அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து தான் நம்ப மாட்டேன் என்றும் கமலா தெரிவித்துள்ளார். நம்பகமான ஒருவர் உறுதி அளித்தால் மட்டுமே அதனை நம்புவேனே தவிர டிரம்ப்பை நம்ப மாட்டேன் என்றும் கமலா ஹாரீஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: