முகப்பு /செய்தி /கொரோனா / அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற டிரம்ப் யோசனைக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற டிரம்ப் யோசனைக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

டிரம்ப்  (Reuters)

டிரம்ப் (Reuters)

அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற டிரம்பின் கருத்துக்கு அந்நாட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரலாற்றில் நடக்காத ஒன்றை டிரம்ப் செயல்படுத்த நினைக்க கூடாது என்றும் குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொற்று பரவல் காரணமாக கலிஃபோர்னியா, யுட்டா, ஹவாய், கொலராடோ, ஒரிகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார். தபால் வாக்குகள் மூலம் துல்லியமற்ற முடிவுகளையே பெறமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிரப்பின் யோசனையை, ஆளும் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் ஒரு சேர நிராகரித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதே இல்லை என கூறியுள்ள குடியரசுக் கட்சியின் செனட்டர், மெக்கானல், தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குடியரசுக் கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

அமெரிக்க தேர்தலை தள்ளி வைக்க அதிபருக்கும் அதிகாரம் இல்லை. அங்கு நவம்பர் மாதத்தின் முதல் திங்கட் கிழமைக்கு பிறகு வரும் செவ்வாய் கிழமை தேர்தல் நடத்துவது மரபு. இந்த தேதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனில் பிரிதிநிதிகளின் சபை மற்றும் செனட் சபைகளில் ஒப்புதல் தேவை.

தற்போது பிரிதிநிதிகளின் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் தேர்தல் தேதியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனில் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Donald Trump, USA