முகப்பு /செய்தி /கொரோனா / டெல்டா வேரியண்டால் அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 3 வாரங்களில் இரண்டு மடங்காக பாதிப்பு உயர்ந்ததால் அதிர்ச்சி!

டெல்டா வேரியண்டால் அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 3 வாரங்களில் இரண்டு மடங்காக பாதிப்பு உயர்ந்ததால் அதிர்ச்சி!

அமெரிக்காவின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா:

அமெரிக்காவின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா:

அமெரிக்காவில் டெல்டா வேரியண்டின் பரவல் வேகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதுவே அங்கு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தினசரி கொரோனா பாதிப்பில் உலக அளவில் மிரட்டி வந்த அமெரிக்காவில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது. ஆனால் இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயமும் அடங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பில் உச்சம் தொட்டு வந்த அமெரிக்காவில், பல மாதங்களாக பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது அங்கு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்திருக்கிறது. 3 வாரங்களில் மட்டும் புதிதாக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது டெல்டா வேரியண்ட் கொரோனா வைரஸின் பரவலே என்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வாக்கில் தினசரி பாதிப்பு 11,300 ஆக இருந்தது, இது கடந்த திங்களன்று 23,600 ஆக அதிகரித்திருக்கிறது என்பது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மூலமாக தெரியவருகிறது.

Also Read:   அவ்ளோ கண்டிப்பான பழங்குடியின கிராமத்துக்குள்ளேயே கொரோனா பரவியது எப்படி?: குழம்பும் அதிகாரிகள்!

அமெரிக்காவில் டெல்டா வேரியண்டின் பரவல் வேகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதுவே அங்கு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. டெல்டா வேரியண்டானது முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக மைன் மற்றும் தெற்கு டகோடா மாகாணங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாதிக்கும் மேல் அதாவது 55.6% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது அமெரிக்க நோய் தடுப்பு மைய தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

அதே போல தடுப்பூசி செலுத்துவதில் பின்னிலையில் உள்ள 5 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. மிசோரி (45.9), அர்கன்சாஸ் (43%), நெவடா (50.9%), லூசியானா (39.2%) மற்றும் உட்டாஹ் (49.5%) ஆகிய மாகாணங்கள் தடுப்பூசி செலுத்துவதில் பின் தங்கியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஜனவரியில் அங்கு ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,400 என்ற அளவில் பலி எண்ணிக்கை இருந்தது. எனினும் தற்போது அங்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால் பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து காணப்படுகிறது. தடுப்பூசி நோயின் தீவிரத்தை குறைத்திருப்பது இதன் மூலம் கண்கூடாக தெரியவருவதாக நோயியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Corona, Covid-19, Delta Variants, USA