கொரோனா வைரஸ் பரவ அமெரிக்க ராணுவம் தான் காரணம்... சீனா பகீரங்க குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவ அமெரிக்க ராணுவம் தான் காரணம்... சீனா பகீரங்க குற்றச்சாட்டு
  • Share this:
சீனாவிற்கு அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரஸை பரப்பியிருக்கலாம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீனாவின் ஊஹானில் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல்முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய சீன அரசால் கொரோனா சீனா முழுவதும் பரவி கடுமையான தாக்கத்தை உருவாக்கியது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கதையடுத்து சுதாரித்துக் கொண்ட சீன அரசு, போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸோ லிஜியான் அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரவ வைத்துள்ளது என்று கூறி உள்ளார். சீனாவில் இருக்கும் சமூகவலைதளங்களில் இதுப்போன்ற செய்தி பரவி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அதிகாரி இதுப்போன்று கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுதொடர்பாக ஸோ லிஜியா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதித்துள்ளது? எந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்? இந்த வைரஸை ஊஹானுக்கு அமெரிக்க ராணுவம்தான் கொண்டு வந்திருக்கும், வெளிப்படையாக இருங்கள். உங்களது தகவல்களை வெளி உலகுக்குத் தெரிவியுங்கள். அமெரிக்கா இதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Also see:


 
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading