எச்1பி விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் தங்குவதற்கான காலம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் தங்கியுள்ளோர் 60 நாட்கள் ஊதியமின்றி இருந்தால், விசா ரத்தாகும் நிலை உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பலர் 40 நாட்களுக்கு மேலாக வேலைவாய்ப்பை இழந்துள்ளதால், சுமார் 2 லட்சம் பேரின் எச்1பி விசா ரத்தாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் எச்1பி விசா வைத்திருப்போர் மற்றும் அமெரிக்க குடியுரிமை கோரி காத்திருப்போருக்கான கால அவகாசம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுளளது.
இதனை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேறல் சேவை மையம் தெரிவித்துள்ளது. காலநீட்டிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கப்பட்டது முதல் 60 நாட்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொளள்ப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.