தயார் நிலையில் இல்லாத உ.பி. மருத்துவமனைகள்: கொரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பும் கொடுமை

தயார் நிலையில் இல்லாத உ.பி. மருத்துவமனைகள்: கொரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பும் கொடுமை

மாதிரிப்படம்

உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கொரோனா நோயாளிகள் பிதுங்கி வழிவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, இதனால் நோயாளிகள் லக்னோவை அடுத்துள்ள மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டி வரிசை கட்டி நிற்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.

  • Share this:
உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கொரோனா நோயாளிகள் பிதுங்கி வழிவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, இதனால் நோயாளிகள் லக்னோவை அடுத்துள்ள மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டி வரிசை கட்டி நிற்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.

ஆனால் லக்னோவில் இடமில்லாமல் மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் இடமில்லாமல் திருப்பி அனுப்பப் படுகின்றனர். ஒன்று படுக்கை இல்லை என்று திருப்பி அனுப்புகின்றனர், அல்லது உள்ளூர்வாசிகளுக்காக படுக்கையை வைத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றைச் சேர்ந்த நிருபர்கள் சீதாபூர், பாரபங்கி ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவமனைகளில் நேரடி விசிட் மேற்கொண்டனர். போலீஸார் ஆக்ஸிஜன் பிளாண்ட்களுக்கு காவல் காக்கும் காட்சியும், மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் கோவிட் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதையும் இந்த நிருபர்கள் கண்டு பதிவு செய்துள்ளனர்.

செவ்வாயன்று உ.பி.யில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,23,544 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் மரணமடைந்துள்ளனர். லக்னோவில் மட்டும் சுமார் 52,376 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருப்பதால் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்காமலேயே இருந்து வருகிறது, காரணம் பாசிட்டிவ் என்றால் லீவ் கொடுக்க வேண்டும் அப்போது பணியாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து விடும், இப்படியாக இரட்டை நெருக்கடியில் உ.பி. தவித்து வருகிறது.

இதோடு மட்டுமல்லாமல் நாட்டில் இந்தத் தேர்தல் படுத்தும் பாடு வேறு. பஞ்சாயத்து தேர்தலுக்காக பணியாற்றும் பல அலுவலர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

லக்னோவில் மட்டுமல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும் லெவல் 2 நோயாளிகள் என்று வகைப்பிரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கே மருத்துவமனைகளில் இடமில்லை. லெவல் 1 நோயாளிகளை வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். லெவல் 3 நோயாளிகளுக்கு வெண்ட்டிலேட்டர் ஆதரவு தேவை.

சில மாவட்ட மருத்துவமனைகளில் ‘கோவிட் நோயாளிகள் வர வேண்டாம், ஐசியு படுக்கைகள் இல்லை’ என்று அறிவிப்புப் பலகையே வைத்துவிட்டனராம். லக்னோவிலிருந்து 10-15 நிமிடங்களுக்கு ஒருமுறை சாரிசாரியாக கோவிட் நோயாளிகள் வருவதை அந்த நிருபர்கள் கண்டுள்ளனர்.

மேலும் இன்னொரு அச்சுறுத்தல் என்னவெனில் நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் பரிதவித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பிளாண்ட்களுக்கு பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. நோயாளிகளை அனுமதிப்பவர்கள் கொந்தளிக்கும் நிலை அங்கு தோன்றியுள்ளது. பெரும்பாலான நோயாளிகள் கோவிட் நிமோனியாவுடன் தான் வருகின்றனர். இந்து மருத்துவமனையில் 340 படுக்கைகள் இருந்தாலும் 140 படுக்கைகள்தான் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன.

இதே வேளையில் உ.பி.யில் கொரொனா பரிசோதனைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது. வரிசையில் நிற்பவர்கள் பெரும்பாலும் காய்ச்சல், இருமல், உடம்பு வலி உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Published by:Muthukumar
First published: