மறைக்கப்பட்டதா களப்பணியாளர்களின் மரணம்? - சென்னை மாநகராட்சியில் எத்தனை உயிரிழப்புகள்?

தூய்மைப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் இதுவரை 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைக்கப்பட்டதா களப்பணியாளர்களின் மரணம்? - சென்னை மாநகராட்சியில் எத்தனை உயிரிழப்புகள்?
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் இதுவரை 72,500 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 21,766 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறித்த விவரங்களை மாநகராட்சி தெரிவிக்கவில்லை.


இந்நிலையில், இதுவரை 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 9 நபர்களில் இரண்டு நபருக்கு இறப்புச் சான்றிதழில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 நபர்களில் ஒருவரின் விவரம் மட்டும் கணக்கில் காட்டப்பட்டு அவருக்கு மட்டும் அரசு அறிவித்த இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also see:
உயிரிழந்த அனைவரின் பெயர்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், அதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் உயிரிழப்பைத் தடுக்க தேவையான பாதுகாப்பை மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading