covid in India | தாய் இறந்து விடுவார் எனக் கதறியும் கேட்காமல் ஆக்சிஜன் சிலிண்டர் பறிப்பு: 2 மணி நேரத்தில் அந்தத் தாய் மரணமடைந்த கொடுமை

covid in India | தாய் இறந்து விடுவார் எனக் கதறியும் கேட்காமல் ஆக்சிஜன் சிலிண்டர் பறிப்பு: 2 மணி நேரத்தில் அந்தத் தாய் மரணமடைந்த கொடுமை

ஆக்சிஜனை கொண்டு செல்லாதீர்கள் என்று கதறிய மகனின் தாய் மரணம்.

ஆக்ராவில் மருத்துவமனை ஒன்றில் போலீசார் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் சென்றதைப் பார்த்து நபர் ஒருவர் காலில் விழுந்து போலீஸாரிடம் கெஞ்சிய காட்சி நெஞ்சை உலுக்கிய வீடியோவாக வைரலானது, அந்த நபரின் தாயார், ஆக்சிஜனை பறித்த 2 மணி நேரத்தில், மரணமடைந்தது பெரும் பரபரப்பாகியுள்ளது.

  • Share this:
    உத்தரப் பிரதேசம், ஆக்ராவில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம், என் தாயார் இறந்து விடுவார் என்று போலீசாரிடம் காலில் விழுந்து மன்றாடிய ஒரு நபரின் வீடியோ நேற்று வைரலாகி அனைவரது வயிற்றையும் பிசைந்தது.

    திங்களன்று சதாரில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவில் ஆம்புலன்ஸ் அருகே ஒரு நபர் பிபிஇ கவச உடையில் நின்று கொண்டிருக்கிறார், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பாதுகாப்பாக காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. அப்போதுதான் அந்த நபர் போலீசார் காலில் விழுந்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டாம் என் தாயார் இறந்து விடுவார் என்று கதறினார்.

    “தயவு செய்யுங்கள் சார், நான் எப்படி சிலிண்டருக்கு ஏற்பாடு செய்வேன். என் தாயாரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று என் குடும்பத்தினரிடம் சபதம் செய்திருக்கிறேன், ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்” என்று கதறினார் அந்த நபர். போலீசார் தங்கள் வேலையைப் பார்த்தனர், அருகில் இருந்த ஒருவர் கதறிய நபருக்கு ஆறுதல் அளித்தார்.

    17 வயது மகன் கொரோனா பாதித்து கவலைக்கிடமாக இருந்த தன் தாய்க்காக ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் போலீசார் ஏன் அதை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக அவர் கதறக் கதற கொண்டு சென்றனர் என்பது புரியவில்லை, அந்தத் தாயார் இந்தச் சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கெல்லாம் இறந்து போய் விட்டார்.

    இதனையடுத்து ஏடிஜிபி ராஜீவ் கிருஷ்ணா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த இளைஞரின் பெயர் அன்ஷ் கோயல். ஆங்கில ஊடகத்திற்கு கூறும்போது, “நான் எத்தனையோ கெஞ்சியும் ஆக்சிஜன் சிலிண்டரைப் பிடுங்கிச் சென்றனர்” என்றார். ஆக்சிஜன் யாரோ வி.ஐ.பிக்கு கொடுக்கப்பட்டதாக குடும்பத்தார் சாடியுள்ளனர்.

    இதனையடுத்து ஏடிஜிபி ராஜிவ் கிருஷ்ணா, ‘தவறு செய்த போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    ஆனால் முன்னதாக ஆக்ரா போலீஸ் அது காலி சிலிண்டர் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தார், ஆனால் அது காலி சிலிண்டர் இல்லை, இதனால் ஒருவரின் தாயார் உயிர் பிரிந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

    அன்மோல் ஊடகத்துக்குக் கூறும்போது, “என் அம்மாவுக்கான சிலிண்டரை ஏன் எடுத்துச் செல்கின்றனர் என்று நான் வார்டு ஊழியர்களிடம் விசாரித்த போது அது யாரோ விஐபிக்கு கொண்டு செல்லப்படுகிறது” என்றனர்.

    என் தாயாருக்கு மூச்சுத் திணறல் வந்தது, பல முறை சிஆர்பி கொடுத்தோம் ஆனால் காப்பாற்ற முடியவில்லை. போலீசார் ஆக்சிஜனை எடுத்துச் சென்ற 2 மணி நேரத்தில் என் தாய் உயிரை விட்டார்.

    ஆன்ஷின் தாயார் உஷா மூத்த ஜன் சங் தலைவரின் உறவினர், அவர் விஎச்பி அமைப்பின் துணைத்தலைவர் சம்பத் ராய்க்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: