வகுப்பில் பாதி மாணவர்களுக்கு கொரோனாவை பரப்பிய ஆசிரியர்!

மாதிரி படம்

கொரோனா பாதித்த பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் இருந்து வகுப்பில் பயின்ற பாதி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கு டெல்டா வேரியண்ட் கொரோனா பரவியிருக்கிறது.

  • Share this:
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, மாஸ்க் அணியாத ஆசிரியர் ஒருவர் தன்னிடம் வகுப்பில் பயின்ற பாதி மாணவர்களுக்கு கொரோனாவை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியரால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர்களின் பெற்றோர்களும், சகோதர சகோதரிகள் சிலருக்கும் கொரோனா பரவியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருகின்றன. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்காத நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஆபத்தை கொண்டு வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்த பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் இருந்து வகுப்பில் பயின்ற பாதி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கு டெல்டா வேரியண்ட் கொரோனா பரவிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மரின் கவுண்டியில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளி ஒன்றில் பயின்ற மாணவர்கள் பலருக்கு கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியதால் இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

Also Read:  சிவகங்கை காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இது குறித்த விசாரணையின் முடிவில் அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவரே நோய்த்தொற்றின் தொடக்கமாக இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அலர்ஜி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அந்தப் பள்ளியின் தடுப்பூசி போடாத இரண்டு ஆசிரியைகளுள் இவரும் ஒருவர் என்ற நிலையில் இவர் மாஸ்க் அணியாமல் பாடம் நடத்தியதாக தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியைக்கு 3 நாட்களுக்குப் பின் கொரோனா உறுதியானது.

Also Read:   மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு ஊசி நூலால் தையல் போட்ட ‘சந்தேக பேர்வழி’ கணவர்!

இதையடுத்து அவரின் வகுப்பில் பயின்ற 24 மாணவர்களில் 12 பேருக்கும் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து அவர்களின் பெற்றோருக்கும் அதே பள்ளியில் பயின்ற இதர வகுப்பு மாணவர்கள் நால்வருக்கும் கொரோனா பரவியிருந்தது பின்னர் கண்டறியப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திய போது முதல் இரண்டு வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கே கொரோனா அதிகம் பரவியிருக்கிறது எனவும் பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கூறியுள்ளது. அந்த ஆசிரியர் மாஸ்க் அணியாத நிலையில் பாடங்களை சத்தமாக சில நேரங்களில் படித்துக் காட்டியுள்ளார். வேறு வகுப்பு மாணவர்கள் சிலருக்கு கொரோனா பரவியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: