ஹோம் /நியூஸ் /கொரோனா /

’மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்’ - ஐநா பொதுச் செயலாளர் அறிவிப்பு

’மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்’ - ஐநா பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.

கொரோனா தடுப்பூசியை மக்கள் மத்தியில் போட்டுக் கொள்ளவிருப்பதாக ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பரவத் தொடங்கியது முதலே அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிய பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் சில தோல்வியடைந்தாலும் வேறு சில மருந்துகள் ஓரளவு மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. விரைவில் கொரோனாவுக்கான தடுப்பூசி சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை மக்கள் மத்தியில் போட்டுக் கொள்ளவிருப்பதாக ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஐநாவின் தலைமைச் செயலகத்தில் குட்டரெஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசியை பொதுவெளியில் செலுத்திக் கொள்வீர்களா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்குப் பதிலளித்த குட்டரெஸ், தனக்கு தடுப்பூசி கிடைக்கும்போது அதனை பொதுமக்கள் மத்தியில் செலுத்திக் கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பது ஒவ்வொருவரின் தார்மீக கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், உலகின் எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பாக ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus, UNO