அதிகரிக்கும் கொரோனா பரவல்... மாஸ்க் போடுவதில் சுணக்கம்... எந்த மாஸ்க் சரியானது?

அதிகரிக்கும் கொரோனா பரவல்... மாஸ்க் போடுவதில் சுணக்கம்... எந்த மாஸ்க் சரியானது?

கோப்புப் படம்

கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு முக கவசம் அணிவதில் பொதுமக்கள் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் முக கவசம் அணிவது மிக அவசியமாகிறது. கொரோனாவிலிருந்து கண்டிப்பாக காப்பாற்றும் ஒரே தடுப்பூசி அதுவே. ஆனால் கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு முக கவசம் அணிவதில் பொதுமக்கள் சுணக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா குறித்த அலட்சியப் போக்கு, முக கவசம் அணிவதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவை இதற்கு காரணங்களாகும்.

முக கவசம் அணிய அரசு சொல்வது நமது நன்மைக்கு என புரிகிறது. ஆனால் முக கவசம் கையில் இருந்தும் அதை அணிய மறந்து விட்டேன் என்றும், பொது வெளியில் இருக்கும் போதே தனியாக நின்று கொண்டிருப்பதால் முக கவசம் அணியவில்லை என கூறுவதும், முக கவசம் அணிந்தால் கொரோனா வராது என உத்தரவாதம் உண்டா என கேள்வி எழுப்பியும் பல காரணங்களுக்காக முக கவசம் அணியாத போக்கை காண முடிகிறது.

Also read... கொரோனா விதிமீறல் : தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூல்

Also read... கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

சரியான முக கவசம் அணிவதால் அசௌகரியங்களை தவிர்க்கலாம் என நுரையீரல் மருத்துவர் ஜெயராமன் கூறுகிறார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மூன்று அடுக்கு முக கவசம் போதுமானது. மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் என் 95 மாஸ்க் அணிவது அவசியம். மருத்த்துவமனையில் உள்ள பிற பணியாளர்கள் நீல நிற சர்ஜிகல் மாஸ்க் அணிந்தால் போதும். வெயில் காலம் என்பதால் பொதுமக்கள் வெளியில் வரும் போது நான்கு அல்லது ஐந்து மாஸ்க் வஒத்துக் கொண்டு வியர்வை ஏற்பட்டால் முக கவசத்தை மாற்றுவது அவசியம் என தெரிவிக்கிறார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: