ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க முடிவு
தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கவுள்ளதாக அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க முடிவு
- News18 Tamil
- Last Updated: November 27, 2020, 10:45 PM IST
ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவன தடுப்பு மருந்துகள் மிகக் குளிரான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு பராமரிப்பது கடினம் என்பதால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த தடுப்பூசி நம்பிக்கைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பரிசோதனையில் இரண்டு டோஸ்கள் பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும், ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக முடிவுகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து நடத்த உள்ளதாக அஸ்ட்ரா ஸெனெகா அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு ஆஸ்திரேலியாவின் சிஎஸ்எல் நிறுவனம், ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சிஎஸ்எல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இது உலகின் நம்பகமான தடுப்பூசிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படியொரு செய்தி வெளியாகியிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்