• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களுக்கு கருணைக் காட்டுங்கள்... கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி கடிதம்

கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களுக்கு கருணைக் காட்டுங்கள்... கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி கடிதம்

மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும்  கல்லூரி நிர்வாகங்கள்  கருணையுடன்  நடந்துகொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

  • Share this:
கல்விக் கட்டணங்கள் வசூல் செய்வது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும்  கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா நோய் தொற்றால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்ட சூழலில் சில கல்வி நிறுவனங்கள் கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மாணவர்களை நிர்பந்திப்பதாக புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளது.



இத்தகைய கடுமையான சூழலில் மாணவர்களிடம் கல்வி, கட்டணம் வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு போதிய அளவு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கடிதத்தில் தெரிவித்துள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: