• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளிய அமெரிக்கா !

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளிய அமெரிக்கா !

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரே நாளில் 1 830 பேர் உட்பட மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்தனர்.

    உலகையே உலுக்கி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரை 17, 79,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,08,770 ஆக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழப்பு 20 ஆயிரத்தைக் கடந்ததன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் உயிரிழந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. ஸ்பெயினில் உயிரிழப்பு 17,000 நெருங்கி வருகிறது. இத்தாலியில் கொரோனாவால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 பேர் உயிரிழக்கின்றனர்.

    பிரான்ஸ் நாட்டில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 30,000யும் உயிரிழப்பு 14,000 யும் நெருங்குகிறது. ஜெர்மனியில் 1 லட்சத்து 25,000 கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 2871-ஆக உள்ளது.

    சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. பிரிட்டனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 917 பேர் உயிரிழந்தனர்.

    Also see...













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube





    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: