Breaking : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி

Breaking : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி
  • Share this:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பிரதமருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சீனாவின் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்படித்துள்ளது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, ஈரான், தென்கொரிய, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.


சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 23,976 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகும்.. இந்தியாவில் கொரோனா வைரஸால் 753 பாதிக்கப்பட்டும், 20 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனாவால் 11,600 பேர் பாதிக்கப்பட்டும் 578 உயிரிழந்தும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 71 வயதான இங்கிலாந்து இளவரசர் சர்லாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர். தற்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதுதொடர்பாக பிரதமர் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், கடந்த 24 மணி நேரமாக கொரோனா அறிகுறி இருந்ததால், ஆய்வு செய்து பார்ததில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். இருந்தாலும் வீடியோ கான்பிரான்ஸ் மூலமாக இந்த வைரஸ்க்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுவேன்“ என்றுள்ளார்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading