மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று..

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவில் சோதனை செய்து கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்மிரிதி இரானி பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

  கடந்த வாரம் தனது தொகுதியான உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதிக்கு சென்று சில திட்டங்களையும் தொடங்கி வைத்திருந்தார்.

  மேலும் படிக்க...தீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்... கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்  உலகளவில் அதிபர்கள், பிரதமர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Vaijayanthi S
  First published: