ஹோம் /நியூஸ் /கொரோனா /

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனிடையே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த எடியூரப்பா, ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

I have tested #COVID positive today. All those who have come in contact with me in the last 2-3 days may please get themselves tested.

அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 11,44,93,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. டெல்லியில் தொற்று பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தீவிரமாக பரவி வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதன்படி, உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், மால்கள் உள்ளிட்டவை வார இறுதி நாட்களில் செயல்படாது. திரையரங்குகளில் 30 விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்றும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் பெங்காலி மார்க்கெட், சரோஜினி நகர், கரோல்பாக், சாந்தினி சவுக் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் எமதர்மன் வேடத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு விநியோகிக்கப்படுவதை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தாலும், உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. ஆனால், இன்னும் 2 வாரங்கள் கடந்த பிறகே உண்மை நிலையை அறிய முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு, ஜூலை இறுதியில் உச்சத்தை எட்டியது. கடந்தாண்டு ஜூலை 27ம் தேதி 6,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரை கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி அதிகபட்சமாக 2,393 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதாவது கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கி சுமார் 4 மாதங்களில் தான் உச்சபட்ச அளவை கொரோனா பாதிப்பு எட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போதைய 2ம் அலையில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருப்பது, மக்களை கலக்கமடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று மட்டும் 7,819 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,564 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டின் உச்சபட்ச அளவைத் தாண்டியிருந்தாலும் கூட, இறப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால், உண்மை நிலவரத்தை அறிய 2 வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

அதேநேரம், தற்போதைய உயிரிழப்புகள், ஏப்ரல் முதல் வாரத்தில் உருவான தொற்றால் ஏற்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். அதே நேரம் ஏப்ரல் 10ம் தேதிக்கு பிந்தைய பாதிப்புகளால் எந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய இரண்டு வாரங்கள் ஆகலாம் என்றும் பிரகாஷ் கூறியுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Prakash Javadekar