முகப்பு /செய்தி /கொரோனா / ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை இருமடங்களாக அதிகரிக்க முடிவு: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டிவிட்டரில் உறுதி

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை இருமடங்களாக அதிகரிக்க முடிவு: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டிவிட்டரில் உறுதி

 மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க 20 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு துரிதகதியில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனைத்து உதவிகளை செய்து வருகிறது.

அதன்படி, ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க 20 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு துரிதகதியில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்ஷ்வர்தன் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை இருமடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்துகள் சில்லறை விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். ஆக்சிஜன் வசதியை தடையின்றி கொடுக்கவும், கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியை செப்டம்பர் மாதத்திற்குள் 10 மடங்காக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus