ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்... செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்...!

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்... செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்...!
செக்யூரிட்டி ஏஜன்ஸி. (கோப்புப் படம்)
  • Share this:
தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு மற்றும் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா எதிர்பாராத சூழலை சந்தித்து வருவதாகவும்,பொருளாதாரத்தை பாதித்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மால்கள்,கடைகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது.


தனியார் ஏஜென்சிகள் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சம்பள பிடித்தம் செய்யக்கூடாது என்றும், அவர்கள் பணிக்கு வந்ததாக கருதி முழு சம்பளத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also see...
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்