முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா மூன்றாவது அலை கணிப்பை மக்கள் வானிலை அறிக்கைபோல நினைக்கின்றனர் - மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை

கொரோனா மூன்றாவது அலை கணிப்பை மக்கள் வானிலை அறிக்கைபோல நினைக்கின்றனர் - மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை

பல மாநிலங்கள் தங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டாலும்,பல நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எங்கும் சுதந்திரமாக சுற்றலாம் என்பது அர்த்தமல்ல. அத்தியாவசியமற்ற பயணங்கள் மற்றும் தேவையற்ற சுற்றுப்பயணங்களை தவிர்ப்பது அவசியம். அத்தியாவசியம், அவசியம், அவசரம் என்பன போன்ற தேவைகளுக்கு மட்டுமே உங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லுங்கள். மூன்றாவது COVID அலையை நோக்கி காத்திருக்கும் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

கொரோனா மூன்றாவது அலை கணிப்பை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வானிலை கணிப்பு போல மூன்றாவது அலை கணிப்பை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா முதல் அலையின் பாதிப்பு குறைந்தநிலையில், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. அனைத்து நடவடிக்கைகளும் முன்பைப் போலவே நடைபெற்றன. இந்தநிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாவது அலையை வீரியத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்திய சுகாதாரத்துறை திணறியது.

இந்தநிலையில், தற்போது கொரோனா இரண்டாவது முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், சில வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்துவருவதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்துள்ளனர். அதனால், பொதுமக்கள் முன்பைப் போல முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் கூடுவதைப் பார்க்க முடிகிறது. இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் முன்பு போல இயல்பாக முகக்கவசம் இல்லாமல் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரி, ‘கொரோனா மூன்றாவது அலை வரும் என்று கணித்திருப்பதை வானிலை கணிப்பு போல மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். மூன்றாவது அலை கணிப்பை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். வீட்டிலிருப்பது ஜெயலலில் அடைத்ததுபோல உள்ளதால் வெளியே வருவதாக மக்கள் கூறுகின்றனர்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: CoronaVirus