கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி -மத்திய அரசு அறிவிப்பு

தடுப்பூசி

கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உலக நாடுகள் முழுவதையும் கொரோனா வைரஸ் சிதைத்துவிட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்து பழைய வாழ்க்கைக்கு செல்ல தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து ரஷ்யாவின் ஸ்புட்னிவி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில் பொதுமக்களிடையே தடுப்பூசி மீது அச்சம் நிலவியது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டனர். தற்போது, பொதுமக்கள் விருப்பத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். தற்போது கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட்டுவருகிறது.

  இருப்பினும், இதுரையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்தநிலையில், தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, ‘கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இனி கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த சில வாரங்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனம், கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாம். அதனால், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைவிட பயன்கள் அதிகமாக உள்ளது என்று பரிந்துரைத்திருந்தது. அதனையடுத்து, மத்திய அரசு இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நெறிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.
  Published by:Karthick S
  First published: