இணைநோய் இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: மத்திய அமைச்சர் ஜவடேகர்

இணைநோய் இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: மத்திய அமைச்சர் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி...

  • Share this:
இந்தியாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 40,715 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 199 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 16,86,796 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,60,166 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேரும், இதுவரை 1 கோடியே 11,81,253 பேரும் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.  பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,45,377 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேர கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில், 81 விழுக்காடு பாதிப்பு பதிவாகியுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோபே, கொரோனா விதிகளை  பொதுமக்கள் மீறினால் ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மூலம் ஊரடங்கை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நான்காவது நாளாக 40ஆயிரத்தை எட்டியுள்ளதால், அதிக பாதிப்புள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அனுப்பப்பட்ட 401 பரிசோதனை மாதிரிகளில், 81 விழுக்காடு பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா இருப்பதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இதுவரை 4 கோடியே 84,94,594 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இணைநோய் இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ளவேண்டுமென பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க... திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி ரத்து...

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவுசெய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நோய்க்கு எதிரான தற்காப்புக் கவசமாக உள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2-வது தவணையை 4 முதல் 8 வார இடைவெளியில் செலுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஜவடேகர் தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: