ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான யுனிசெஃப் , இந்தியாவுக்கு 3 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் கொரோனா சோதனைக் கருவிகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றால் இந்தியா பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் தங்களால் முயன்ற உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவ கருவிகள்,தடுப்பூசி போன்றவற்றை வழங்க பல நாடுகளும் முன் வந்துள்ளன.
ஐ.நா.வின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான யுனிசெஃப் , இந்தியாவுக்கு 3 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள்,
கொரோனா பரிசோதனை இயந்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவுக்கு தொடர்ந்து உதவுவோம் என தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு, இந்தியாவில் அனைத்து தரப்பினருக்கு தடுப்பூசி சமமாக சென்று சேர உதவிகளை வழங்குவோம் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளரின் இணை செய்திதொடர்பாளரான ஃபர்கான் ஹாக் , வடகிழக்கு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 25
ஆக்ஸிஜன் ஆலைகளை கொள்முதல் செய்து நிறுவவும், நாடு முழுவதும் துறைமுகங்களில் வெப்ப ஸ்கேனர்களை நிறுவவும் யுனிசெஃப் உதவி வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசிகளை குளுமையான நிலையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதாலும் இந்தியாவின் குளிர்பதன சங்கிலியை வலுபடுத்தும் விதமாகவும் சிறப்பு குளிர்சாதன பெட்டிகளை வாங்கியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.