இந்தியாவின் ஊரடங்கு முயற்சி வலுவானது! - பிரதமர் மோடிக்கு ஐநா பாராட்டு

நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஊரடங்கு முயற்சி வலுவானது! - பிரதமர் மோடிக்கு ஐநா பாராட்டு
மோடி
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மிகவும் வலுவான உத்தரவாகும் என ஐநா மற்றும் உலக சுகாதார நிறுவனம் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதற்கு ஐநா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஐநா சபையின் சுகாதாரப் பிரிவு, ’இந்தியாவின் இம்முயற்சி மிகவும் வலுவானதும் கூட. இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரையில் 562 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க: கொரோனா வைரஸ் பரிசோதனை ஆப்..! அனைவருக்குமான ரிலையன்ஸ் MyJio!
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்