எச்சரிக்கைகளை மதிக்காலம் அலட்சியப்படுத்தியதற்கு உலகம் கொடுத்த விலை - ஐ.நா பொதுச்செயலாளர் வேதனை

”கொரோனா வைரஸ் தொடர்பாக நடத்தப்படும் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா அறிவித்துள்ளது”

எச்சரிக்கைகளை மதிக்காலம் அலட்சியப்படுத்தியதற்கு உலகம் கொடுத்த விலை - ஐ.நா பொதுச்செயலாளர் வேதனை
ஆண்டனியோ குட்ரரோஸ். (Photo: Reuters)
  • Share this:
நாடுகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லாததால்தான் உலகம் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரரோஸ் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்து நாடு பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் உலக சுகாதார அமைப்பின் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற ஆஸ்திரேலிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சிக்கு ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக, சர்வதேச விசாரணை நேரடியாக சீனாவை குற்றம் சுமத்துவதாக அமையும் என்று கருதிய சீனா, ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.


அதேபோல், உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், தைவானையும் ஒரு பார்வையாளர் நாடாக சேர்க்கும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிக்கு சீனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீன அரசு கருதி வருகிறது. இந்நிலையில், தைவானை தனி நாடாக கருதி அதற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் முடிவை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, சர்வதேச விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசிய அவர், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு விசாரணையை தொடரலாம் என்று கூறியுள்ளார்.

எந்தவித சார்புமின்றி நடத்தப்படும் விசாரணைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள ஷி ஜின்பிங், உலக அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 150 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிப்பதாக கூறியுள்ளார். இதேபோல், சீனாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை உலக நாடுகள் அலட்சியம் செய்ததால், தற்போது உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், எச்சரிக்கையை மதிக்காமல், ஒவ்வொரு நாடும் அவர்கள் விரும்பிய படி செயல்பட்டதாகவும், சில நாடுகள் எந்த விதமான தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். உலக நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் உலகம் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக ஆண்டோனியோ குட்ரெஸ் குற்றம்சாட்டியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading