பிரிட்டனின் உருமாறிய கொரோனா வகையை விட இந்திய வகை அதிகம் ஒட்டிப் பரவக்கூடியது: புனே ஆய்வகம் தகவல்

பிரிட்டனின் உருமாறிய கொரோனா வகையை விட இந்திய வகை அதிகம் ஒட்டிப் பரவக்கூடியது: புனே ஆய்வகம் தகவல்

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த முறை தீவிரம் கூடுதலாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன. 

  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த முறை தீவிரம் கூடுதலாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன.

அதாவது வழக்கமான கொரோனா நோய் அறிகுறிகளான இருமல், காய்ச்சல் இல்லாமல், மூட்டு வலி, பலவீனம், பசியின்மை, கோவிட் நிமோனியா ஆகியவற்றோரு கொரோனா பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மூக்கு, தொண்டைப் பகுதியில் தொற்றி பிறகு நுரையீரலுக்குப் பரவாமல் இப்போது நேரடியாக நுரையீரலையே தொற்றுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றி விரைவில் ஏற்படுகிறது, காய்ச்சல் இல்லாமல் ஆனால் எக்ஸ்-ரேயில் ஒரு மித நெஞ்சு நிமோனியா இருப்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது.

மூக்கு வழியாக மேற்கொள்ளப்படும் கோவிட் 19 சோதனைகள் அடிக்கடி நெகெட்டிவ் என்று வருகிறது, ஆனால் பெரும்பாலும் இவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆக இருப்பதும் தெரியவந்துள்ளது. இது மரணத்தை சடுதியில் ஏற்படுத்துவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் புனேயில் உள்ள தேசிய வைராலஜி கழகம் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வகை மாதிரியான B.1.1.7 என்பது இந்தியாவில் பரவும் கொரோனாவை விட அதிகமாக ஒட்டிப் பரவக்கூடியதல்ல என்று கூறியுள்ளது.

சிரியாவின் வெள்ளெலி மீது நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆய்வுத் தகவல் வெளியானதாகவும் இது இன்னும் நிபுணர்களால் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.1.1.7 என்ற பிரிட்டன் கொரோனா வகைமாதிரி உருமாற்றமடைந்து விரைவில் பரவும் தன்மை கொண்டது என்று டிசம்பரில் பிரிட்டனில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த உரு, இயல் மாறிய கொரோனா வைரஸ் வாக்சினுக்கும் அடங்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்தியாவில் உருமாறிய, கவலையளிக்கக் கூடிய 3 வகை மாதிரிகளில் 771 நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டனர். இதில் 736 பேருக்கு பிரிட்டன் வகை தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பஞ்சாபில் உள்ள சுகாதார அதிகாரிகள் கூறும் போது கொரோனா வைரஸ் சாம்பிள்களின் சமீபத்திய சோதனைகளில் 80% உருமாறிய பிரிட்டன் வகை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.

இந்த பிரிட்டன் வகை மாதிரி எவ்வளவு விரைவில் பரவுகிறது என்பதைக் கண்டறிய நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வாளர்கள் சிரியாவின் வெள்ளெலிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினர், 9 எலிகளுக்கு பிரிட்டன் வகைமாதிரியைச் செலுத்தினர்.

இன்னொரு 9 வெள்ளெலிகளுக்கு இந்தியாவில் அதிகம் பரவிய கொரோனா வைரஸ் மாதிரியைச் செலுத்தினர். மேலும் எலிகளை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து கூண்டுகளில் அருகருகே அடைத்து வைத்து பரவும் வேகத்தைக் கண்டனர்.  எலிகளின் எடைகளும் கணக்கிடப்பட்டு வைரஸ் தாக்கத்தினால் அது எப்படி பலவீனமாகின என்பதையும் கண்டறிந்தனர்.

இதில் பிரிட்டன் வகை கொரோனா இந்திய கொரோனா வைரஸைக் காட்டிலும் அதிகமாகப் பவரும் தன்மை கொண்டதல்ல என்பது கண்டறியப்பட்டது.
Published by:Muthukumar
First published: