இந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியானது
20 பேர் உறுமாறிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: December 30, 2020, 8:57 AM IST
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோன மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன. எனினும் பல்வேறு நாடுகளில் இந்த புதியவகை கொரோனா பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பதும், அவர்களுள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் புதிய வகை கொரோன பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 20 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையில், கொரோனா தடுப்பு மருந்தாகிய கோவேக்சின் உருமாறிய புதியவகை கொரோனாவையும் எதிர்க்கும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.