இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மாதிரிப் படம்

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ளும் முதல் நாடாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது.

 • Share this:
  ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதியைக் கடந்த வாரம் இங்கிலாந்து வழங்கியது. இதையடுத்து முதல்கட்டமாக 8 லட்சம் தடுப்பூசி குப்பிகள் இங்கிலாந்திற்கு வழங்கப்பட்டுள்ளன. 975 குப்பிகள் கொண்ட தடுப்பூசி தொகுப்புகள் ஞாயிறன்று குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. முதலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக இரண்டரை கோடிப்பேருக்கு தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

  இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்காக தங்களை யாரும் அழைக்க தேவையில்லை என்றும், தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க...மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை செருப்பால் அடித்த பொதுமக்கள் (வீடியோ)

  கடந்த சனிக்கிழமையன்றே தடுப்பூசி செலுத்தும் பணியை ரஷ்யா தொடங்கி விட்டாலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, முறையாக மூன்று கட்ட சோதனைகளையும் முடித்து அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: