அதிவேகமாக பரவும் ‘டெல்டா பிளஸ்’- ஊரடங்கை முழுமையாக தளர்த்தும் முடிவை ஒத்திவைத்த பிரிட்டன்

வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்திவிட்டு பப்கள், ரெஸ்டாரண்டுகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை முழுமையாக திறக்க அனுமதிக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது.

வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்திவிட்டு பப்கள், ரெஸ்டாரண்டுகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை முழுமையாக திறக்க அனுமதிக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது.

  • Share this:
புதிதாக பரவும் டெல்டா (Delta) வேரியண்ட் காரணமாக பிரிட்டனில் ஊரடங்கு தளர்வுகளை நீக்கும் முடிவை அரசு ஒத்திவைத்துள்ளது.

பிரிட்டனில் ஏற்கெனவே போடப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நோய்த்தொற்று குறைந்ததால் படிப்படியாக அவை தளர்த்தப்பட்டன. தற்போது பரவும் உருமாறிய புதிய ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் மேலும் உருமாறிய வகையாக உருவெடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் தளர்க்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை அதிவேகமாக பரவும் புதிய டெல்டா பிளஸ் வகையால் தளர்வுகளை முழுமையாக தளர்த்தும் திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்திவைத்துள்ளார்.

வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்திவிட்டு பப்கள், ரெஸ்டாரண்டுகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை முழுமையாக திறக்க அனுமதிக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை ஜூலை 19 வரை ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இன்னும் சிறிது காலம் காத்திருப்பது நல்லது என கருதுவதாகவும், தற்போதைய சூழலை கணக்கிடும்போது, நான்கு வாரங்களுக்கு மேல் தேவையில்லை என்று தான் நம்புவதாக கூறுகியுள்ளார். இத்தகைய தாமதத்தின் விளைவாக வணிக ரீதியான எந்த திட்டத்தையும் அரசு மேற்கொள்வதாக இல்லை எனவும் போரிஸ் கூறியுள்ளார். பிரிட்டனின் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு கூடுதல் நேரம் தேவை எனவும் தெரிவித்தார்.

மேலும், பிரிட்டன் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வல்லன்ஸ் கூறுகையில், இன்னும் நான்கு வாரங்களின் நோய் தாக்கத்தின் உச்சம் 30% முதல் 50% வரை குறைந்துவிடும் என கூறினார்.

சமீபத்தில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வேரியண்ட் வேகமாக பரவி வருகிறது. முந்தைய அலையை விட இது 60% அதிகமாக பரவக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றது. மேலும், மூன்றாவது அலையை தூண்டும் சாத்தியக்கூறுகள் இவற்றுக்கு உண்டு என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டனில் கடந்த 14ஆம் தேதி 7,742 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வாரத்திற்கு சுமார் 64 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக போரிஸ் கூறினார். தற்போதைய சூழலில் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அடுத்த நான்கு வாரங்களில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 1.28 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
Published by:Archana R
First published: