கொரோனா பரவுவதாக வதந்தி... இங்கிலாந்தில் 5ஜி டவர்களை கொளுத்திய மக்கள்...

கொரோனா பரவுவதாக வதந்தி... இங்கிலாந்தில் 5ஜி டவர்களை கொளுத்திய மக்கள்...
  • Share this:
5ஜி மொபைல் டவர்களின் மூலம் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தியை நம்பி இங்கிலாந்தில் 5ஜி டவர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் 5ஜி டவர்களின் மூலமாகத் தான் கொரோனா பரவுவதாகவும், 5ஜி வசதி இல்லாத ஆஃப்ரிக்காவில் கொரோனா பரவவில்லை என்றும் வதந்தி பரவியது. 5ஜி மொபைலை இயக்கும்போது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை அது கவர்ந்து விடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இதையடுத்து பர்மிங்ஹாம், லிவர்பூல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5ஜி டவர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. செல்ஃபோன் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் சில இடங்களில் துன்புறுத்தப்பட்ட நிலையில் வோடஃபோன் உள்ளிட்ட நான்கு செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.


அதில் அறிவியல் ஆதாரமில்லாத தகவல்களை நம்பி வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளன.

Also see...
 











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading